ஓட்டுனர்களுக்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கே அபராதப் பற்றுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டுனர் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் குறித்த ஓட்டுனர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

தகுதி வரையறைகள் – போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிடிப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

வழக்கு – பொலிஸாரால் அபராதம் சுமத்தப்பட்ட ஓட்டுனர்

பொலிஸ் அலுவலர் உடனடி அபராத அறிக்கையை வழங்குதல் – (ஆண்-பெண்)ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தல்.

ஓட்டுனர் உரிமத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்:

பொலிஸ் நிலையத்தில்

ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று போக்குவரத்து பொலிஸ் பிரிவிடமிருந்து அபராத பற்றுச் சீட்டை பெறுதல்.

குறிப்பு:

ஓட்டுனர் அபராத பற்றுச் சீட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து பெறுவதற்கு உடனடி அபராத அனுமதியை கொண்டுவர வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில்

ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பணம் செலுத்தியதை நிரூபிப்பதற்காக பற்றுச் சீட்டை பெறவேண்டும்.

குறிப்பு:

ஓட்டுனர் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அவருக்கு உடனடி அபராத அனுமதியே தற்காலிக உரிமமாக வழங்கப்படும் பணம் செலுத்தவில்லை என்றால் அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார்.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:

பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்து பிரிவில்) சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

படிவத்தின் பெயர் :

உடனடி அபராத அனுமதி – ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலர் படிவம் (M.T.A 37) வழங்குவார்.

அபராத பற்றுச் சீட்டு – வழக்கு தொடர்வதற்குப் பதிலாக அபராதம்.

விண்ணப்ப படிவம்:

பொது மக்கள் பூர்த்தி செய்வதற்கு எந்த விண்ணப்ப படிவமும் இல்லை. ஆனால் பொலிஸ் அலுவலர் பூர்த்தி செய்வார்.

போக்குவரத்துப் பிரிவு கீழே கொடுக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டை மக்களுக்கு வழங்கும்.

ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம்

குறிப்பு :

ஓட்டுனரிடம் அந்த நேரத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லை எனில் (ஆண்-பெண்) அவர்களுக்கு பொலிஸ் 405 பற்றுச் சீட்டை அபராத அறிக்கையை வழங்கும்.

ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம். (DOP 405)

சேவைத்தொடர்பான கட்டணங்கள்:

அபராதம் – வழக்குத் தொடர்பவரின் அபராத ஆவணங்களில் கிடைக்க பெறும் (படிவம் பொலிஸ் DOP F397)

தேவையான இணைப்பு ஆவணங்கள்:

பொலிஸ் அதிகாரி உடனடி அபராதம் வழங்கும் அந்த நேரத்தில் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும்.

சேவை பொறுப்புக் குழு:

அலுவலக பொறுப்பாளர் (OIC) – பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து கிளையில்

அலுவலக பொறுப்பாளர் (OIC) – பொலிஸ் நிலையத்தில்

போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:

உறுதியான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையம் வழங்காது.

அபராத சீட்டிற்கு பணம் செலுத்துவதற்கான படிமுறை..

  • படி 1: ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல்.
  • படி 2: போக்குவரத்து பொலிஸ் ஓட்டுனரிடமிருந்து உரிமத்தை பறிமுதல் செய்தல்.
  • படி 3: பொலிஸ் உடனடிஅபராத அறிக்கையை வழங்குதல்.
  • படி 4: ஓட்டுனர் அலுவலகத்திற்குச் சென்று போக்குவரத்து பிரிவிடமிருந்து பணம் செலுத்துவதற்கான படிவத்தை பெறுதல்.
  • படி 5: ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பணம் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை வாங்குதல்.
  • படி 6: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பற்றுச் சீட்டை காண்பித்து பொலிஸிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறுதல்.
Facebook Comments