புதிய எல்லை நிர்ணய அறிக்கையில் ஆணைக்குழுவின் அங்கம் வகிக்கும் அனைவரினதும் ஆதரவு இருப்பின் மாத்திரமே அறிக்கையை ஏற்றுகொள்ள முடியும். ஜனவரி 17ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

faizar-musthafa

உள்ளூராட்சி சபை புதிய எல்லை நிர்ணய அறிக்கை பூரணப்படுத்தப்பட்டு அமைச்சில் கையளிக்கபட்டவுடன் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்பட்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பைசர் முஸ்தப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Facebook Comments