பயன்­பாட்­டா­ள­ருக்கு அருந்­து­வ­தற்கு கோப்பி பரி­மா­று­வ­துடன் அவ­ருடன் இணைந்து செஸ் உள்­ள­டங்­க­லாக விளை­யாட்­டு­களை விளை­யாடும் ஆற்­றலைக் கொண்ட  ரோபோ­வொன்றை தாய்­வானைச் சேர்ந்த பொறி­யி­யலா­ளர்கள் வடி­வ­மைத்து காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

article-doc-jp83f-13mvvbq3z19dcc41574db17556ef-786_634x475

இந்த ரோபோ அமெ­ரிக்க லாஸ் வெகாஸில் இடம்­பெற்ற பாவ­னை­யாளர் இலத்­தி­ர­னியல் உப­க­ரண கண்­காட்­சியில் பங்­கேற்று பார்­வை­யா­ளர்­க­ளுடன் செஸ் விளை­யாட்டை திறம்பட விளை­யாடி அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

 

இந்த ரோபோவை மதி­நுட்ப நோக்­கு முறை­மை­யொன்­றாக அதனை உரு­வாக்­­கி­யுள்ள தாய்வான் தொழிற்­றுறை ஆராய்ச்சி நிறு­வகம் குறிப்­பிட்­டுள்­ளது.

தான் செயற்­படும் சூழ்­நி­லையை அவ­தா­னித்து அதற்கு ஏற்ப பொருட்­களை அடை­யாளம் கண்டு சுய­மாக நகர்த்தும் வல்­ல­மையைக் கொண்ட இந்த ரோபோ இதற்கு முன்னர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இதையொத்த ரோபோக்களை விடவும் மிகவும் முன்னேற்றகரமானது என அந்த நிறுவனம் கூறுகிறது.

Facebook Comments