வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருசில நபர்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற குடும்பஸ்தர் இன்று பிற்பகல் பிரதேசவாசிகள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. சடலம் வீட்டிலேயே உள்ளது. சம்பவ இடத்தில் விரைந்த  வவுனியா  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

Facebook Comments