இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடி அறைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பகல் இரத்தினபுரி நகரில் விடுதி ஒன்றில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கிய ஜோடி நேற்றிரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

A palm

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தற்கொலை செய்து கொண்ட ஜோடி தங்கியிருந்த அறையில் இருந்து நேற்றிரவு சத்தம் கேட்டுள்ளது அதனைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அறையை திறந்து பார்த்த போது இருவரும் ஏதோ ஒரு பானத்தை அருந்திய நிலையில் விழுந்து கிடந்தமையை ஊழியர்கள் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் இவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த 27 வயதான ஆண் தேல நோரகொல்ல, பிரதேசத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பெண்ணை அடையாளம் காண விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments