காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள், இந்திய இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Indian-Army

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதி வழியாக இரண்டு தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்திய இராணுவ வீரர்கள் தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனையும் மீறி ஊடுருவ முயன்ற நிலையில் இரண்டு தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரமாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Facebook Comments