பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசர சட்டம் இயற்ற வலியுறுத்த வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

201612191749075131_Cyclone-Vardah-O-Panneerselvam-seeks-Rs-22500-crore_SECVPF

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது.

இந்நிலையில் ‘தமிழ் பாரம்பரியத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்’, என முதல்வர் பன்னீர்செல்வம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வரின் கடித்தத்திற்கு மத்திய அரசு வழங்க இருக்கும் முடிவு பொங்கல் பண்டிகைக்கு முன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அவசர சட்டம் இயற்ற வலியுறுத்த வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments