201605071414583524_Rahul-Gandhi-Stalin-campaign-today-in-Madurai_SECVPF

தி.மு.க-வின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்துக் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த தகவல் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தி.மு.க-வின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை இந்திய காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமிப்பதற்கான தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய அதனை துரைமுருகன் வழிமொழிந்தார்.அதற்கேற்ப தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

தி.மு.க.வின் விதி 18இல் திருத்தம் செய்யப்பட்டு புதிதாக தி.மு.க. செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தி.மு.க தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் தி.மு.க செயல் தலைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தி.மு.க பொருளாளர் பதவியிலும் மு.க.ஸ்டாலின் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments