முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியின்போது  வெளிநாடுகளுக்கு  10301  ஏக்கர் காணிகளை  வழங்கியுள்ளார். அவற்றில்  விற்பனை செய்யப்பட்ட காணிகளும் உள்ளன. அவ்வாறு செய்தவர் இன்று  அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எதிராக  கூச்சலிடுகின்றார் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

President-and-Rajitha-newsfirst

லசந்த படுகொலை தொடர்பான விசாரணைகள்  திருப்திகரமாக  இல்லை  என்ற குற்றச்சாட்டை நானும் முன்வைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற  வாராந்த   அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியா ளர் மாநாட்டில்   கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

கேள்வி:- லசந்தவின் படுகொலை  நினைவுத் தினத்தின் போது விசாரணை  செயற்பாடுள் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பில்?

பதில்: லசந்த படுகொலை தொடர்பான விசாரணைகள்  திருப்திகரமாக   இல்லை என்ற குற்றச்சாட்டை நானும் முன்வைக்கின்றேன்.

கேள்வி:- ஏன் இவ்வாறான  நிலைமை காணப்படுகின்றது?

பதில்:- தெரியவில்லை.  ஆனால் இதுபோன்று அனைத்து விடயங்களும்  தாமதமாகவே இருக்கின்றன.

கேள்வி:- இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்தா?

பதில்:- இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை.

கேள்வி:- அம்பாந்தோட்டை காணி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளாரே?

பதில்:-  அவர்கள் பேசியிருப்பார்கள். இந்த விடயத்தில்  கவலைப்படவேண்டாமென   கூறியிருப்பார். ஆனால்  கடந்த  ஆட்சிக்காலத்தின் போது மஹிந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  10301   ஏக்கர் காணிகளை  வழங்கியிருக்கிறார். இவற்றில் காணி விற்பனைகளும்  இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு செயற்பட்ட   மஹிந்த ராஜபக்ஷ  இன்று  கூச்சலெழுப்புகிறார்.

கேள்வி:-  அரசாங்கம்  எடுக்கும் முடிவுகள் அமைச்சரவையில் பேசப்படுகிறதா?

பதில்:- அர-சாங்கம் என்ன முடிவெடுத்தாலும் அது தொடர்பில்  அமைச்சரவையில் பேசப்படும். அமைச்சரவையில் கலந்துரையாடாமல்  எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படமாட்டாது.

கேள்வி:- சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணி வழங்குவது தொடர்பான  தீர்மானம்  பொருளாதாரக் கொள்கை தொடர்பான கூட்டத்தில்  எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றதே?

பதில்:- பொருளாதாரக் கொள்கைக் குழு வில் தீர்மானம்  எடுக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் அமைச்சரவையில் தீர்மானம்  எடுக்கப்படும்.  தற்போது மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர   துறைமுகம் என்பன நஷ்டத்தில் இயங்குகின்றன. இவ ற்றை இலாபம் ஈட்டும்  நிறுவனங்களாக   மாற்றவேண்டும். அதற்கு   இவ்வாறான திட்டங்களுக்கு  செல்லவேண்டியது அவசியம். இல்லாவிடின்  மக்களின் வரியை அதிகரிக்க  வேண்டிய நிலைமை ஏற்படும்.

கேள்வி:- பிணை முறிவிவகாரம் தொடர் பில் எந்த முன்னேற்றமும்  இல்லையே?

பதில்:- நீங்கள் அவ்வாறு கூறமுடியாது.  அது தொடர்பாக விசாரணை  நடத்தப்பட்டு  தற்போது அந்த அறிக்கை  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளது.  சட்டமா அதிபர் திணைக்களம்  தேவையான  நடவடிக்கைகளை எடுக்கும்.  உங்களதோ,  எனதோ தேவைக்காக சட்டமா  அதிபர் எதனையும் செய்யமாட்டார். அவர் சட்டத்தின்படி நடவடிக்கை  எடுப்பார்.  தவறுகள் நிகழ்ந்-திருப்பதாக   கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு  மாதங்களே ஆகின்றன.  எனவே அவர்  தேவையானநேரத்தில் நடவடிக்கை  எடுப்பார்.

கேள்வி: குளியாப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாகன உற்பத்தி நிலையம்  வொக்ஸ் வொகன் நிறுவனத்தினுடையதா?

பதில்: யார் கூறியது? அங்கு வாகன உற்பத்தி நிறுவனமே  தொடங்கப்படவுள்ளது.  முதலில் வொ க்ஸ் வொகன் நிறுவனத்துடன்  பேசப்பட்டது. ஆனால் பின்னர் அந்த நிறுவனும்  அதனை மறுத்துவிட்டது.  தற்போது வேறு ஒரு நிறுவனம்  அதனை செய்கின்றது.   அவ்வளவுதான்.

கேள்வி: முதலீட்டுச் சபையின் இணையதளத்தில்  வொக்ஸ் வொகன்  நிறுவனத்தின் முதலீடு என  குறிப்பிடப்பட்டிருந்ததே?

பதில்: இலங்கையின் முதலீட்டுச் சபை யின்  இணையத்தளம் என்பதனை  மறக்க வேண்டாம். இதுபோன்ற காரணங்க ளி னால்தான் எமது நாடு இந்த  நிலையில் இருக்கின்றது. இல்லாவிடின் உலகின் அனைத்து முதலீடுகளும்  எமது நாட்டிலேயே இருக்கும்.

Facebook Comments