prisoner-jail-800x450
அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத
சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி
ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது அதாவது கடந்த
2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை
சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர
விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது இன்நிலையில் குறித்த அரசியல்
கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இட்டு இருப்பதாக போலி குற்றசாட்டை முன்வைத்து சாதாரணமாக ஒரு கைதிக்கு இருக்ககூடிய அனைத்து  உரிமைகளும்  அவரிடமிருந்து
பறிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறைசாலைகுள்ளே பிரத்தியோகமாக அமைக்கப்பட பூட்டிய சிறிய அறைக்குள் தனிமையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்
தெரிவித்துள்ளனர்
 அதுதவிர நீண்டகாலமாக பெற்றோர் உறவினரை பாக்காமல் இருந்த தமது மகனை உறவினர் சந்திப்புக்க யாழ்ப்பாண சிறைசாலைக்கு கொண்டுவந்த போதும் யாழ்ப்பாண
சிறைசாலை நிர்வாகத்தினர் அவரை ஏற்காது திருப்பி அனுப்பயுள்ளனர் இது தொடர்பில் யாழ்
மனித உருமை அலுவலகத்திடமும் சிறைசாலை ஆணையாளரிடமும் சர்வதேச செஞ்சிலுவை
சங்கத்திடமும் பெற்றோர் முறை இட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை என்று பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர் மூன்று வருடங்களுக்கு
மேலாக குறுகிய அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ள தனது மகன் பாரிய உடல் உள ரீதியாக பாரிய தாக்கம் அடைந்துள்ளதாகவும் வயது முதிர்ந்த எம்மால் அடிக்கடி அனுராதபுர
சிறைசாலைக்கு சென்று பார்க்கமுடியாதுள்ளது அதற்கான வசதி வாய்ப்புகளும் எம்மிடம் இல்லை
என்றும் கவலைவெளியுட்டுள்ளனர் நீண்டகாலம் சிறை வைக்கப்படிருக்கும் தமது பிள்ளை நல்லாட்சியேலும் விடுதலை பெற்று வீடு வருவான் என்று எண்ணிய தமக்கு இத்தகைய
கொடுமையான செயற்பாடுகள் திட்டம் இட்ட பழிவாங்கலான செயற்பாடு என கூறும் அவர்கள்
இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதகவனம் செலுத்தி உடனடி தீர்வினை எட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
Facebook Comments