கிளிநொச்சியில் 28 பேருக்கு டெங்கு வேகமாக பரவுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை
dengue-page-upload
கிளிநொச்சியில் டெங்கு காச்சல்  வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 01.01.2017 ஆம் திகதியில் இருந்து 13.01.2017 ஆம் திகதி வரைக்கும் சுமார் 28  பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிக்கிறது என்று மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டெங்கு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் சிரமதான பணிகளை மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால்  டெங்கு  விழிப்புணர்வு  நாடகங்களும்  நடத்தப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் உயிர்கொல்லி  டெங்கு நோயில் இருந்து  பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை  மேற்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள கர்ப்பவதிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது.  கடந்த வருடம் வரை டெங்கு  நோய் அற்ற மாவட்டமாக கிளிநொச்சி காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது  2017ஆம் வருடத்தின் 13 நாட்களில் கிளிநொச்சியில்  20 இடங்களிலிருந்து 28 பேர்  டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவும் மாவட்ட வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்
எனவே வேகமாக பரவிவரும் டெங்கு காச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனம் கண்டு முற்றாக அழித்தொழிக்குமாறும் சுகாதார பிரிவினர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனர்.
Facebook Comments