paranthan z4
பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின்  ஆளுகைக்கு  உட்ப்பட்ட   எரிபொருள்  நிலையத்தில்  கடந்த  ஐந்து  நாட்களாக  எரிபொருள் இல்லாமையினால்  பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
paranthan z2
 வவுனியா  ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களுக்கு  செல்லும் பிரதான  சந்தியாக அமைந்துள்ள  பரந்தன் சந்தியில்  அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தை  எதிர்பார்த்தே சிற்றூர்தி  சாரதிகள் முதல் பாரஊர்தி சாரதிகள்  வரை   பயணிக்கின்றனர்  இருந்தபொழுதும்  குறித்த எரிபொருள் நிலையத்தில்  எரிபொருள் அற்று போவது இது முதல்தடவை அல்ல  எனவும்  மாதமொன்றில் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள்  எரிபொருள் அற்றுப் போவதானால்  பெரும் சிரமங்களை  தெரிவிக்கின்றனர் .
paranthan z3
அத்துடன்  ஒவ்வொரு மாதமும் எரிபொருள்  அற்றுப் போவதற்கான  காரணம் என்ன என்று தெரிய வில்லை  எனவும் இதற்கான ஒரு தீர்வினை  பெற்றுத் தருமாறும்  கேட்டு நிற்கின்றனர்
Facebook Comments