IMG_6082
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாப்பாமோட்டை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பெளதீக அபிவிருத்தியின் கீழ் மாணவர்களது நலனை கருத்தில்கொண்டு 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு கல்வி அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து 5.7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி மற்றும் பாடசாலை சமூகத்தால் உருவாக்கப்பட்ட அன்பான ஆசானும் மாணவர்களும் என்ற சிலையையும் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வு 13-01-2016 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பங்குத்தந்தை, இந்துக் குருக்கள் ஆகியோரும் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், மடு வலய கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்டஸ் ஆகியோர் கலந்துகொண்டனர், நிகழ்வை கல்லூரியின் அதிபர் அ.குணசீலன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
IMG_6093
குறித்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் மாணவர் சமூகத்தின் வளர்ச்சியே அவர்களது பாடசாலையின் அபிவிருத்தியாகும் அந்தவாறு மாணவர்கள் வளர்ச்சியடையவும், பாடசாலை அபிவிருத்தி அடைவதற்கும் குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம், மற்றும் பாடசாலையின் பழையமாணவர் ஆகியோர் ஒற்றுமையாக குறித்த மாணவர்களது வளர்ச்சியை கருத்திற்கொண்டு சகல விடயங்களிலும் அக்கறையோடு நடந்துகொண்டால் நிச்சயமாக அந்த பாடசாலையும் அதன் மாணவர்களும் அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும் என்றும் தெரிவித்ததோடு, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் அவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை தான் அன்பளிப்பாக வழங்குவதாகவும் அதற்குரிய ஆவனைகளை செய்யுமாறு அதிபரிடம் பணித்ததோடு, பாடசாலையின் அபிவிருத்திக்கு இந்த வருடம் 01 இலட்சம் ரூபாய் நிதியை வழங்குவதாகவும் வாக்களித்ததோடு, குறித்த பாடசாலையின் தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு சித்தியடையும் பட்சத்தில் வெகுமதியான அன்பளிப்பு வழங்குவதாக ஊக்கமளித்தார், அத்தோடு குறித்த அன்பான ஆசானும் மாணவர்களும் என்ற தொனிப்பொருளில் நல்லதொரு கலைநயத்துடன் பாடசாலையில் அமைக்கப்பட்ட சிலையை உருவாக்கிய பாடசாலையின் ஆசிரியர் அவர்களையும் பாராட்டியதோடு ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிப்பும் இடம்பெற்றது.
IMG_6124
Facebook Comments