Ontario-Premier-Kathleen-Wynne-Canadian-Press

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர்  கத்தலின் வெயின்  தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்,  ஒன்ராறியோ முதல்வர்  கத்தலின் வெயினை சந்தித்தார்.

இந்த இருதரப்புகளுக்கிடையான சந்திப்பு, இரு தரப்பு அரச தலைவர்களுக்கும் முதல் தடவையாக அமைந்ததுடன், ஒன்ராறியோ – வட மாகாணங்களுக்கிடையான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர்  நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை, கத்தலின்  தனது அலுவலகத்தில் வரவேற்றதோடு ஒரு காத்திரமான சந்திப்பையும் மேற்கொண்டார்.

பொருளாதார அபிவிருத்தி, பெண்களை வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசன சேவை நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட ஒன்ராறியோ – வடமாகாண உறவின் முகிழ்வையும் ஓத்துழைப்பையும் நல்குவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதில் ஒன்ராறியோ   விரும்புகின்றது இந்த சந்திப்பின் போது கத்தலின் தெரிவித்துள்ளார்.

Facebook Comments