உலக சுகாதார நிறுவனம் ஏற்றுகொள்வதைவிட இரண்டு மடங்கு அதிகம் மோசமானதாக இருக்குமளவில், 2017 ஆம் ஆண்டு காற்றுத் தரத்தை சீனாவின் தலைநகரான பெய்ஜிய் மேயர் நிர்ணயித்திருக்கிறார்.

Beijing-air-pollution-009

சுமார் ஒரு கியூபிக் மீட்டருக்கு 60 நுண்கிராம் அளவுக்கு (PM2.5 = பி.எம். 2.5) காற்றின் தரத்தை சேதப்படுத்தும் துகள்களை ஆண்டு சராசரியாக குறிப்பிடும் அளவில் பராமரிக்க சீனாவின் தலைநகரிலுள்ள அதிகாரிகள் குறிக்கோள் வைத்திருப்பதாக சாய் ச்சி கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்த அளவு 73 -ஐ அடைந்ததாக கணிக்கப்பட்டது.

 

உலக சுகாதார நிறுவனத்தின்படி, ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு 20-இல் இருந்து 25 நுண்கிராம் வரை மட்டுமே.

90 சதவீதத்திற்கும் மேலானோர் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடந்த ஆண்டு பெய்ஜிங் காற்றுத்தராம் மேம்பட்டது. ஆனால், சமீப வாரங்களில் மாசு புகைமூட்டம் நகரத்தை சூழ்ந்திருந்ததால். விமான போக்குவரத்து, துறைமுக நடவடிக்கைள் மற்றும் பள்ளிக்கூடங்கள் பாதிப்புக்குள்ளாயின.

Facebook Comments