Drought-Varatchi

நிலவும் வரட்சியான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனைப்போல, இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் கடும் குளிரான காலநிலையும் தொடரும் என அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் அவ்வப்போது கடும் காற்று வீசக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments