அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கம்: சசிகலாவுக்கு கொடுத்த சரியான நெத்தியடி

0
72

அதிமுகவின் அவைத்தலைவரான மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார்.

இதனையடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் சசிகலா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின்அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனை நீக்குவதாக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

மேலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் மதுசூதனனை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக-வின் புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மதுசூதனன், என்னை யாரும் நீக்க முடியாது, என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை, நான் சசிகலாவை பதவியிலிருந்து நீக்கி விட்டேன் என அறிவித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவரான மதுசூதனன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here