கிளிநொச்சியில் யுவதியுடன் உல்லாசமாக இருந்த இராணுவ அதிகாரி மடக்கி பிடிக்கப்பட்டார் : நேற்றிரவு சம்பவம்

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் தாய் தந்தையுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 10 மணியளவில் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யுவதி  ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை ஜந்து மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாயை, நேற்று  இரவு  பத்து மணியளவில் இருவரும் ஒன்றாக இருந்த போது கிராமமக்கள் வழங்கிய தவலுக்கு அமைவாக  இராணுவ  அதிகாரிகள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் கண்காணிக்க இராணுவத்தினர் நியமிக்கபட்டிருந்தனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் கிராமங்களில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் தங்களின் இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கி வருவதனை  பணியாக கொண்டிருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில்  அக்கராயன்  652 பிரிகேட் எஸ் .எல் ,என் .யி  படைத் தலைமையகத்தில் இருந்து  நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை தியபெதும பகுதியில் வசித்துவரும்  நான்கு பிள்ளைகளின் தந்தையான கே .எஸ் .பி   சந்ரசேகர  என்ற  இராணுவ அதிகாரி ஊற்றுப்புல கிராமத்தைச் சேர்ந்த  யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது ஜந்து மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர், பாதிக்கப்பட்ட யுவதியின் வீட்டுக்கு  அடிக்கடி சென்று இரவில் தங்கி நிற்பதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

இராணுவ சிப்பாயின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத பிரதேச மக்கள் பல தடவைகள் எச்சரித்தும் குறித்த இராணுவ அதிகாரி கேட்கவில்லை. மேலும் கிராம மக்களை இராணுவ அதிகாரி மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிராம மக்கள் நேற்று இரவு எட்டு மணியளவில்  குறித்த வீட்டை முற்றுகை செய்துள்ளனர்.

பலமணிநேரங்கள் ஆகியும் குறித்த சிப்பாய்  வெளியில் வராததினால்  பிரதேச வாசிகள்    பிரதேசத்தின் இராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு தகவலை கொண்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவ அதிகாரிகளால்   படைச் சிப்பாய் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார்.

இன்று குறித்த இராணுவ சிப்பாய்  விசாரணைகளுக்காக  இராணுவ பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தினர்  விடுமுறையில் செல்வதென்றால் விடுமுறை என்ற பெயரில்  ஏழு நாட்களும்  அல்லது  பாஸ்  என்றபெயரில்  மூன்று நாட்களும்  விடுமுறை எடுக்கலாம்.

குறித்த  இராணுவச் சிப்பாய்  நேற்றைய தினம் பாஸ்  என்ற பெயரில் மூன்று  நாட்கள்  விடுமுறை  எடுத்துக் கொண்டே  முகாமினை விட்டு வெளியேறி உள்ளார்.

குறித்த யுவதியின் தாயும் தந்தையும் ஏனைய பெற்றோர்கள் போன்று விவேகமானவர்கள் அல்ல என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here