ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக வெளிநாட்டிலிருந்து பதிவான மிஸ்ட் கால்கள் எத்தனை தெரியுமா?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இடையே முதலமைச்சர் பதவியைப் பிடிக்க கடும்போட்டி நிலவிவருகிறது.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், இதுவரை 5 எம்.பி-க்கள், 1. மைத்ரேயன், 2. அசோக்குமார், 3. சுந்தரம் 4.சத்தியபாமா 5. வனரோஜா ஆகியோர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று 6 எம்.எல்.ஏக்கள், 1.சோழவந்தான் – மாணிக்கம், 2. ஊத்தங்கரை – மனோரஞ்சிதம், 3. வாசுதேவ நல்லுார் – மனோகரன், 4. கவுண்டம்பாளையம் – ஆறுகுட்டி, 5. ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன், 6. ஆவடி – மாபா பாண்டியராஜன் (பள்ளி கல்வித் துறை அமைச்சர்) ஆகியோர் ஆதரவு தெரிவித்து நேரில் வந்து சந்தித்துள்ளனர்.

மட்டுமின்றி, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் பொன்னையனும் நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ‘மிஸ்ட் கால்’ பிரச்சாரத்தை சில நாட்கள் முன் தொடங்கினர். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் 92892 22028 என்ற எண்ணுக்கு ‘மிஸ்ட் கால்’ தரலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த பிரச்சாரம் தொடங்கிய 48 மணி நேரத்தில் இதுவரை 33 லட்சம் மிஸ்ட் கால்கள் பதிவாகியுள்ளதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் வெளிநாட்டிலிருந்து பதிவான 1.5 லட்சம் மிஸ்ட் கால்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here