கருணாவின் புதிய கட்சியுடன் இணைந்த முக்கிய தமிழ் கட்சி

0
707

முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

கருணாவின் தலைமையில் உருவாகவுள்ள புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மேலும், இந்த கட்சிக்கு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயரிடப்பட்டுள்ளதுடன், வடகிழக்கினை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இந்த கட்சி செயற்படவுள்ளது.

அத்துடன், கருணாவின் புதிய கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும் பூரண ஆதரவினை வழங்கியுள்ளதுடன், கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியை பதிவுசெய்யும் முயற்சியில் கருணா செயற்பட்டு வருவதுடன் மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here