சென்னை எண்ணெய்க் கசிவால் பேராபத்து: மீன் சாப்பிடுபவர்களுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை..!

சென்னையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிடுவதை பொதுமக்கள் 3 மாதங்கள் நிறுத்துவதே பாதுகாப்பானது என விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானியும், ‘டெரி’ (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் இயக்குனருமான பன்வாரி லால், சென்னை எண்ணூர் எண்ணெய்க் கசிவால் கடல் மிகவும் மாசுபட்டுள்ளது என தமது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மீன்கள், கடல் ஆமைகள், கடல் பறவை ஆகியவை உடல் வெப்பநிலைய் தாழ்வு (hypothermia) என்ற பிரச்னையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் நீரில் உள்ள எண்ணெயால் கடல் உயிரினங்களில் உள்ள ரோமங்கள், உடல் பகுதியில் ஒட்டிக்கொள்வதால், உயிரினங்களின் உடல் வெப்பநிலை பராமரிக்க முடிவதில்லை. இதனால் இறந்து போகின்றது.

மேலும் கடல் உயிரினங்கள் எண்ணெய் மாசை விழுங்குவதால் அதற்கு அல்சர், சிறுநீரகம், கல்லீரல், ரத்த சிவப்பணு சிதைவு, நோய் தடுப்பாற்றல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் நாம் உண்பதால் நமக்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். இதனால் இப்பகுதியில் பிடிக்கும் மீன்களை குறைந்தது 3 மாதங்கள் உண்ணாமல் இருப்பதே சிறந்தது என பன்வாரி லால் எச்சரித்துள்ளார்.

இந்த பெரிய பிரச்னையை சமாளிக்க தேசியப் பேரிடர் மீட்புக் குழுவை (NDRF) அழைத்திருக்கலாம். NDRF நிலநடுக்கம், வெள்ளம், புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கைப் பேரழிவுகளை சிறப்பாகக் கையாண்டிருக்கிறது.

மேலும் இந்த எண்ணெய்க் கசிவு பிரச்னையை இயற்கையான முறையில் தீர்க்கவும் வழிகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here