வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்..!

தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்தும் இல்லை. அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையும் நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேச கிழக்கு மாகாண முதல் அமைச்சர் முன் வந்தால் அவருடன் பேசத் தயார் எனவும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கும்  இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  வட – கிழக்கு இணைப்பு சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் தொடர்பாக இருக்கும் கரிசனை பற்றி அவர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக எந்தந்த அடிப்ப டையிலே அணுகவேண்டும் என் பது தொடர்பாக பேசியுள்ளோம். அதேநேரத்தில் எங்களைப் பிரித்திருந்த சிறு சிறு விடயங்கள் ஆராயப்பட்டன. அவை அது தொடர்பாக புரிந்துணர்வுகளை, ஆதங்கங்களை வெளிப்படுத்தி ஒரு சுமுகமான ஒரு பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றிருக்கின்றது.
ஆனால், முஸ்லிம் மக்கள் எதனை வேண்டு கின்றார்கள் என்ற எண்ணப்பாடுகளை அவர்கள்தான் அதனை வெளிப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் அதனை அடுத்த கூட்டத்திலே வெளிப்படுத்தும் முகமாக ஆவண ரீதியாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆகவே, இதனை வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங் கத்துக்குமிடையில் நடக்கின்ற பேச்சுவார்த்தைக்கு, அரசாங்கம் அதற்கு இடமளிக்குமா அல்லது சிங்கள மக்கள் அதற்கு இடையூறாக இருப்பார்களா? அரசியல் காரணங்களுக்காக இடையூறாக இருக்கமுடியுமா? என கூற முடியாது. கேப்பாப் பிலவு மக்களுக்காக குரல் கொடுக்க தயார் என ஒரு சிங்கள அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
அது நல்லதொரு விடயம். சிங்கள மக்களும் எங்களுடைய பிரச்சினைகளை தெரிந்து வைத்திருக்கின்றார் கள். ஆகவே, அனைவரும் சேர் ந்து நடவடிக்கை எடுக்க வேண் டிய காலகட்டம் வந்திருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here