வீட்டு பணிப்பெண்ணை கற்பழித்த நபர்! கணவரை மயக்கியது பணிப்பெண் என மனைவி புகார்!

நைஜீரியா நாட்டில் தன் வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியை கற்பழித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நைஜீரியா நாட்டில் உள்ள Lagos மாநிலத்தை சேர்ந்தவர் Afrobest Chinedu Eze. இவர் அங்குள்ள சர்வதேச சந்தையில் வர்த்தகராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வீட்டில் Janet (16) என்னும் பெண் பணிப்பெண்ணாக சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரு நாள் Eze மனைவி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் சென்றுள்ளார். அந்த சமயம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த Janetஐ, Eze வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.

பின்னர் இதே போல மனைவி இல்லாத சமயத்தில் மூன்று முறை அவரிடம் Eze தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இது குறித்து Eze மனைவிக்கு தெரியவர, அவர் பணிப்பெண் Janetவிடம், நீ தான் என் கணவரை மயக்கியுள்ளாய் என கூறி கொடுமைப்படுத்தியுள்ளார்.

பின்னர் Janet பொலிசிடம் இது குறித்து புகார் அளிக்க Ezeஐ கைது செய்துள்ள அவர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here