வவுனியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவரை காணவில்லை…!

0
4877

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சிவன் கோவில் வீதி தோணிக்கல் ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிரதிபன்(பிரதாப்)எனும் பெயரையுடைய 33 வயதான இளைஞன் கடந்த 2013 ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகில் சென்றுள்ளார்.

இவர் முகவர்களுடன் பேசியதன் பிரகாரம் அவுஸ்ரேலியாவை அடைந்த உடன் அங்கு செவதற்கான பணத்தை தருவதாக ஒப்புதல் அளித்து சென்று உள்ளார்.அவ்வாறு சென்ற வேளை சர்வதேச கடலை அடைந்து விட்டதாக கூறி  காணாமல் போன இளைஞனின் தந்தையுடன் தொடர்புகொண்டு முகவர்கள் அவுஸ்ரேலியா செலவதற்கான குறிப்பிட்ட பணத்தை கோரியுள்ளனர். அதற்க்கு மறுப்பு தெரிவித்த அவரின் தந்தை போய் இறங்கியவுடன் மொத்த பணத்தையும் தான் தருவதாக வாக்குறியளித்தார்.
இந்த சம்பவம் தான் காணமல் போன நபருக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையிலான இறுதி தொடர்பாக இருந்ததாக அவரது தந்தை எமக்கு தெரிவித்தார்.
பின்பு எந்த தொடர்பையும் பெறாத இளைஞனின் உறவினர்கள் முகவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது அவர்கள் எந்த வித பதிலும் அளிக்கவில்லை. இன்றுவரை குறிப்பிட்ட இளைஞனிடம் இருந்து எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் அவரது குடும்பம் தவித்துக்கொண்டு இருக்கின்றது.

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்:

பத்மநாதன் ஜெயலக்ஷ்மி
சிவன் கோவில் வீதி தோணிக்கல் வவுனியா
தொலைபேசி இலக்கம்: +94779413661 {தகப்பன்-பத்மநாதன்}

தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அவுஸ்ரேலியா சென்ற படகில் மீட்கப்பட்ட அகதிகள் முகாமில் கடற்படையினரால் சிகிச்சை அளிக்கப்பட்ட படம் ஒன்றை இணையத்தின் வாயிலாக பெற்றுள்ளார்கள் அதில் காணப்படும் நபர் ஒருவர் காணாமல் போனவர் என சந்தேகிக்கின்றனர் அது தொடர்பான படங்கள் ….

இதில் இருப்பவர்கள் பற்றி தெரிந்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

பத்மநாதன் ஜெயலக்ஷ்மி
சிவன் கோவில் வீதி தோணிக்கல் வவுனியா
தொலைபேசி இலக்கம்: +94779413661 {தகப்பன்-பத்மநாதன்}

இந்த செய்தியை சாதி,மதம் என்ற பிரிவினை பாராது அனைவரும் பகிர்ந்து பாதிப்புற்று இருக்கும் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுங்கள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here