துயிலுமில்லம் காணியில்வேலி, பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்

0
535

துயிலுமில்லம் காணியில்வேலி, பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்

 

கனகபுரம் துயிலுமில்லம் காணியில் தனியாா் வேலி, பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று செவ்வாய் கிழமை 15-02-2017   தனியாா் ஒருவரினால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபா் ஒருவா் கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா்.
கடந்த நவம்பா் மாதம் மாவீரர் நாள்  நிகழ்வில் பொதுச் சுடரேற்றி நிகழ்வு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் எல்லையிட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா்
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தககவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்ற  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி எடுத்ததோடு, வேலி அமைக்கும் பணியையும் நிறுத்தியுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here