கராத்தே நடுவர்களுக்கான தேசிய பயிற்சிப்பட்டறை கொழும்பில்

உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய விதிமுறைகளை கற்பிக்கும் பயிற்சிப் பட்டறையொன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

 

இப் பயிற்சிப்பட்டறை கொழும்பு டொரிங்டன் கேட்போர் கூடம் மற்றும் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 16, 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குளு தெரிவித்துள்ளது.

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த தேசிய பயிற்சிப் பட்டறையை நடாத்த உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் சபையின் உறுப்பினர் சென்செய். சுல்தான் மன்சூர், குவைத்திலிருந்து வருகை தந்துள்ளார்.

இப்பயிற்சியில் விளக்க உரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேனத்தின் ஊடக செயலாளர் சென்செய்.அன்ரோ டினேஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here