சிக்ஸ் பேக் கிராபிக்ஸா?: ராணாவிடம் உண்மையை சொன்ன அஜீத்..!

சென்னை: விவேகம் போஸ்டரில் தான் சிக்ஸ் பேக் வைத்திருப்பது குறித்த உண்மையை அஜீத் நடிகர் ராணாவிடம் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். போஸ்டரை பார்த்தவர்களால் அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

அஜீத்தா, இப்படி சிக்ஸ் பேக்குடன் இருக்கிறார் என்று வியந்தனர்.

கிராபிக்ஸ்
 அஜீத் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்திருக்க மாட்டார், அது கிராபிக்ஸ் என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அஜீத்தின் சிக்ஸ் பேக் உண்மை தான் என சிவா கூறினார்.
ராணா

அஜீத்துடன் சேர்ந்து ஆரம்பம் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணாவும் சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அவரும் விவேகம் போஸ்டரை பார்த்து மிரண்டு போய் அஜீத்துக்கு போன் செய்துள்ளார்.போஸ்டரை பார்த்தேன் சார், சிக்ஸ் பேக் உண்மையா என்று ராணா அஜீத்திடம் போனில் கேட்டுள்ளார். அதற்கு அஜீத்தோ ஆமாம் சீஃப் என்று பதில் அளித்துள்ளார்.

சிக்ஸ் பேக்

அஜீத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரை நன்கு தெரியும். நான் அவருடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலிகளுடன் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்று ராணா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here