கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

0
415
கிளிநொச்சியில் டெங்கு தீவிரம்
மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல் 43 நாட்களில்இ கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து 126 நோயாளர்கள் டெங்குக்காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களுள் அனேகர் வெளிமாவட்டங்களில் பணி கல்வி நடவடிக்கைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று தங்கியிருந்தவேளையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் எமது மாவட்டத்திற்குத் திரும்பியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கண்ணகைபுரம்இ கிராஞ்சிஇ கல்மடுநகர்இ புன்னைநீராவிஇ தருமபுரம்இ அம்பாள்குளம்இ பாரதிபுரம்இ கோணாவில்இ மலையாளபுரம்இ பிரமந்தனாறுஇ தருமபுரம்இ ஆனைவிழுந்தான்இ கிருஸ்ணபுரம்இ இராமநாதபுரம்இ சாந்தபுரம்இ வேரவில்இ அம்பாள்நகர்இ கணேசபுரம்இ கண்டாவளைஇ கல்லாறுஇ மாவடியம்மன்இ மாயவனூர்இ நாச்சிக்குடாஇ நல்லூர்இ பரமன்கிராய்இ பெரியகுளம்இ பெரியபரந்தன்இ செல்வாநகர்இ ஸ்கந்தபுரம்இ உருத்திரபுரம் கிழக்குஇ உதயநகர் மேற்குஇ வட்டக்கச்சி ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்தே ஒன்றிற்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே உயிர்க்கொல்லி டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாவட்டம் முழுவதும் டெங்குகுடம்பிகள் மற்றும் டெங்கு நுளம்புகள் வாழக்கூடிய இடங்களை இனங்கண்டு அழிக்கும் நோக்குடன் சிரமதான நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளது ஒழுங்கமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல்இ விழிப்புணர்வு ஏற்படுத்துதல்இ பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உங்களதும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களதும் உயிர்களைக் காக்க உதவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வேண்டுகின்றார் .
டெங்குநோய் தடுப்பு செயற்பாடுகள் – கிளிநொச்சி மாவட்டம்
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு
திகதிஇடம்செயற்பாடுகள்
1. 06.02.2017 மலையாளபுரம் டெங்கு பரவுவதற்கு ஏதுவாக உள்ள பகுதிகளை சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்தல்இ சேகரிப்படும் கழிவுகளை பிரதேச சபை உழவு இயந்திரங்களின் மூலம் அகற்றுதல்
2.09.02.2017சிவநகர்இ செல்வாநகர்
3.10.02.2017விவேகானந்தநகர்
4.11.02.2017மாயவனூர்
5.14.02.2017ஆனந்தபுரம்
6.16.02.2017உதயநகர் கிழக்கு
7.17.02.2017திருநகர் வடக்கு
8.20.02.2017அம்பாள்குளம்இ கனகபுரம்
9.27.02.2017கணேசபுரம்இ பெரியபரந்தன்
10.02.03.2017மருதநகர்இ பன்னங்கண்டி
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு
திகதிஇடம்செயற்பாடுகள்
1. 07.02.2017 பொன்னாவெளி டெங்கு பரவுவதற்கு ஏதுவாக உள்ள பகுதிகளை சிரமதான அடிப்படையில்
துப்புரவு செய்தல்இ சகல வீடுகளிலும் உள்ள
கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்
2.10.02.2017நாச்சிக்குடா
3.13.02.2017பள்ளிக்குடாஇ நல்லூர்இ மட்டுவில்நாடு மேற்குஇ கொல்லக்குறிச்சி
4.14.02.2017ஜெயபுரம் வடக்குஇ ஜெயபுரம் தெற்குஇ பல்லவராயன்கட்டு
5.15.02.2017கிராஞ்சி
6.16.02.2017முழங்காவில்இ கரியாலை நாகபடுவான்இ இரணைதீவு
பளை பிரதேச செயலாளர் பிரிவு
திகதிஇடம்செயற்பாடுகள்
1. 02.02.2017 கோவில்வயல்இ கிளாலிஇ அல்லிப்பளை டெங்கு தடுப்பு தொடர்பான பரப்புரைகள்இ பரிசோதனைகள் மேற்கொள்ளுதல்
டெங்கு பரவுவதற்கு ஏதுவாக உள்ள பகுதிகளை சிரமதான அடிப்படையில்
துப்புரவு செய்தல்இ சகல வீடுகளிலும் உள்ள
கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்
2.03.02.2017கோவில்வயல்இ கிளாலிஇ அல்லிப்பளை
3.05.02.2017தர்மக்கேணிஇ கச்சார்வெளிஇ புலோப்பளை
4.06.02.2017தர்மக்கேணிஇ கச்சார்வெளிஇ புலோப்பளைஇ இயக்கச்சிஇ வேம்பொடுகேணிஇ முல்லையடி
5.07.02.2017இயக்கச்சிஇ வேம்பொடுகேணிஇ முல்லையடி
6.13.02.2017சோரன்பற்றுஇ அரசர்கேணிஇ பளை நகரம்
7.14.02.2017சோரன்பற்றுஇ அரசர்கேணிஇ பளை நகரம்
8.16.02.2017மாசார்இ புலோப்பளைஇ இத்தாவில்
9.17.02.2017மாசார்இ புலோப்பளைஇ இத்தாவில்
10.19.02.2017முகாவில்இ முகமாலைஇ தம்பகாமம்
11. 20.02.2017 முகாவில்இ முகமாலைஇ தம்பகாமம்
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here