காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு

0
322
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில்  தொடர் கவனயீர்ப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 20-02-2017 திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களின் விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியிருந்தோம், அரசியல் வாதிகள் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், என பலரும் காலத்திற்கு காலம் பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை எவ்வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை எல்லோரையும் நம்பி நாம் ஏமாந்துவிட்டோம் அல்லது ஏமர்றப்பட்டு விட்டோம் எனவேதான் நாங்கள் எங்களுக்கான நிரந்தர  தீர்வை எதிர்பார்த்து தொடர் கவனீய்ர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்  எனக்  வலிந்து காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள உறவினர்கள் இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டடியலை உடனடியாக வெளியிடு, இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை ஏற்றுக்கொள், அ ரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசுக்க ஜநாவே மேலும் கால அவகாசம் வழங்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களையும்கையில் ஏந்தியிருந்தனர்
   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here