பரவிப்பாஞ்சான் மக்களும் தொடர் போராட்டத்தில்

0
215

பரவிப்பாஞ்சான்  மக்களும்  தொடர் போராட்டத்தில்

கிளிநொச்சி  பரவிப்பாஞ்சான் மக்களும் இன்றுமுதல்   தங்களது  காணிகளை  கையளிக்கும் வரை  தொடர்  கவன ஈர்ப்பு போராட்டத்தை  இன்று காலை முதல்  ஆரம்பித்துள்ளனர் .

இவர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர்   தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் முற்றாக பரவிப்பாஞ்சான்  காணிகள்  விடுவிக்கப் படவில்லை 

பரவிப்பாஞ்சான்  காணிகளை முற்றாக  விடுவிப்பதாக   வாக்குறுதிகள் மட்டுமே  அரசியல்  வாதிகளாலும்  அரச  அதிகாரிகளாலும்   வழங்கப் பட்டு இருந்தது  ஆனால்  இப்பொழுது  ஆரம்பிக்கப்பட்டுள்ள  இப் போராட்டம்  முற்றாக  விடுவிக்கப் படும் வரை தொடரும்  என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here