தேனிலவுக்கு செல்லும் வழியில் மணமகனுக்கு அதிர்ச்சிக்கொடுத்த மணமகள் : அம்பலாங்கொடயில் சம்பவம்

திருமணம் முடிந்து தேனிலவு சென்ற போது மணமகள் மற்றுமொரு நபருடன் தப்பிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மணமகள் மற்றும் மணமகன் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில், இலங்கையில் வந்து திருமணம் முடித்துள்ளனர்.

இவர்களது திருமணம் அலுத்கமவில் உள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது.

மணமகன் கண்டியை சேர்ந்தவரென்பதுடன், மணமகள் சீனிகமவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மணமகன் மற்றும் மணமகள் கொழும்பில் தேனிலவு கொண்டாடுவதற்கு வருகைத்தந்துள்ளனர். இதன்போது இவர்களுக்கு பின்னால் கார் ஒன்றும் தொடர்ந்துள்ளது.

மணமகன் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த விற்பனை நிலையத்தில் குளிர்பானம் வாங்க சென்ற சிலநொடிகளில் மணமகள் பின்னால் வந்த காரில் ஏரிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் மணமகன் குறித்த காரை பின்தொடர்ந்தும் குறித்த காரை பிடிக்கமுடியவில்லை.

பிறகு மணமகன் அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றை தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here