ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

இதன் போது சம்பவம் தொடர்பில் சாட்சியமாக இருக்கும் மாற்றுத்திறனாளியான சிறுவன் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, முதலாவது சந்தேகநபரினது இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சந்தேகநபரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here