சிங்கபூர் உல்லாச ஹோட்டல்களில் இலங்கை அதிகாரிகள்! அதிர்ச்சியில் உயர் தலைவர்

இலங்கை அரசாங்கத்தின் உரிய அனுமதியின்றி திறைசேரி அதிகாரிகள் 100 பேர் கடந்த வாரம் சிங்கப்பூர் விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கம் தற்போது விரைவான விசாரணைகைளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திறைசேரி அதிகாரிகள் 100 பேரை அரசாங்கத்தின் உயர் தலைவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்தித்த பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கமைய இந்த நபர்கள் சிங்கப்பூரின் பிரபல ஹோட்டல்களில் ஒருவருக்கு ஒரு அறை என்ற கணக்கில் ஒதுக்கிக் கொண்டுள்ளனர். ஒரு அறைக்கு மாத்திரம் நாள் ஒன்றுக்கு 2000 – 3000 டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு நடவடிக்கை என கூறி இந்த நபர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளனர். இதன்போது விமான நிலையத்தில் வைத்து அரசாங்கத்தின் உயர் தலைவர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளனர்.

இவ்வளவு பேர் ஒரே முறையில் வெளிநாட்டு விஜயத்தில் ஈடுப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த தலைவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த தலைவர் நாட்டிற்கு வந்த பிறகு இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் வினவியுள்ளதோடு, அந்த விஜயம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் சென்று நாடு திருப்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here