கிளிநொச்சியில் பெண்ணை கத்தியால் குத்தியது இராணுவமா..

சங்கிலியை அறுக்க முற்பட்டார்  தடுத்த போதே குத்தினார் இரரணுவ சிப்பாயாக இருக்கலாம் கத்திகுத்துக்கு இலக்கான பெண்
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில்  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கத்தி குத்துக்கு 56 வயதுடைய பெண் கழுத்தில் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சாந்தபுரம் கிராமத்தில் இருந்து இரணைமடுகுளத்திற்கு நன்னீர் மீன் தொழில் நடவடிக்கைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது  பாதையின்  இடையில் இரணைமடு இராணுவ தலைமையகத்திற்கு பின்புறமாக காட்டுக்குள் மறைந்திருந்த   ஒருவர்  திடீரென  குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட போது அவர் தடுத்து நிறுத்தியபோதே கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை இரணைமடு குளத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த பெண்னிண் மகன் தாயை கடந்த ஜம்பது மீற்றர் சென்ற நிலையில்  அவரின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது தான் குளத்திற்கு சென்றுக்கொண்டிருந்த பற்றைக்குள் பார்த்த   நாவல் கலர் மேலாடை அணிந்திருந்த நபரே அம்மாவை கத்தியால்  குத்திவிட்டு முகாம் பக்கம் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார் அவர் இராணுவ சிப்பாய் என்றே தாம் பலமாக நம்புவதாக தெரிவித்தார் அவரை எப்போது காட்டினால் அடையாளம் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்
குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி கிளிநொச்சி படைகளின் தலைமையகம் அமைந்துள்ள  இரணைமடு முகாமின் பின்புறம்  என்பது குறிப்பிடத்தக்கது சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை  கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து  வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here