சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் சேங்க் வேங்குவேங் இன்று இலங்கை வரவுள்ளார்.

இரண்டு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் சீன பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சின் விசேட பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் நாளை முற்பகல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

நாளை மறுதினம் சீன பாதுகாப்பு அமைச்சர் உட்பட அவரது தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அதிகரித்து கொள்வது சீன அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here