துப்பாக்கிகளுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர்

ஐந்து கட்டுத் துப்பாக்கிகளை தன்வசம் வைத்துக்கொண்டு கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சேனை பயிர் செய்கையில் ஈடுபடும் போர்வையில் வெருங்குளம் குளத்திற்கு அருகில் சந்தேக நபர் கஞ்சா பயிர் செய்து வந்துள்ளார்.

சந்தேக நபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here