புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி-மஹாகும்புக்கடவல பிரதான வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரங்குளி நகரில் இருந்து மஹாகும்புக்கடவல செல்லும் பிரதான வீதி கடந்த 20 வருட காலமாக புனரமைக்கப்படாமல் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்,  இந்த வீதியை புனரமைத்து தருவதற்கு யாரும் முன்வராத நிலையில் மக்கள் இன்று புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பொலிஸார் மாற்று வழிகளைப் பயன்படுத்தி வாகனங்களை அனுப்பி வைத்ததுடன், அசம்பாவிதங்கள்  ஏற்படாமல் இருப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டும்  இருந்தனர்.

இந்நிலையில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அங்கு வருகை தந்ததுடன் பழுதடைந்துள்ள வீதியைப் பார்வையிட்டதுடன்,   ஆர்ப்பாட்டக்கார்களிடம் இவ் வீதியை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளித்த பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here