ஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு

விற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை செவ்­வாய்­க்கி­ழமை அமைச்­ச­ர­வையில் விசேட பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக சுதேச வைத்­திய, போசணை மற்றும் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

Image result for சிகரெட் விற்­ப­னை virakesari

இதன்­பி­ர­காரம் குறித்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­தில் இன்­றைய தினம் கைச்­சாத்­தி­ட­வுள்ளேன்.அத்­துடன் தற்­போது சிகரெட் புகைப்­ப­வர்­களின் வீதம் 47 ஆக குறைந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மல்­வானை, பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மருத்­துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையில் போதைப்­பொருள் பாவனை விட­யத்தில் கடு­மை­யான சட்­ட­திட்­டங்கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. இதற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்றார்.

இதன்­பி­ர­காரம் புகைத்தல் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதற்கு பல்­வேறு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்றோம்.இந்­நிலையில் தற்­போது விற்­ பனை நிலை­யங்­களில் தனி­நபர் தாரா­ள­மாக சிக­ரெட்­களை கொள்­வ­னவு செய்­து­கொள்ள முடியும். தனி­நபர் ஒரு சிகரெட் கொள்­வ­னவு செய்­து­கொள்­வது அதி­க­மாக உள்­ளது.இதனால் சிகரெட் விற்­பனை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.ஆனால் இதற்கு தடை­வி­திக்­க­வுள்ளோம்.

இதற்­கி­ணங்க ஒரு சிகரெட் கொள்­வ­ன­விற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி இன்­றைய தினம் இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் நான் கைச்­சாத்­தி­ட­வுள் ளேன். நாளை செவ்­வாய்­க்கி­ழமை அமைச் ­ச­ரவை கூட்­டத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளேன்.

இதன்­பின்னர் ஒரு­வ­ருக்கு ஒரு சிகரெட் கொள்­வ­னவு செய்ய முடி­யாது. மாறாக தனி­நபர்  சிகரெட் பக்­கெட்­டு­களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். இதனால் தனிநபரின் சிகரெட் கொள்வனவை எம் மால் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் தற்போது சிகரெட் புகைப்பவர்களின் வீதம் 47 வீதமாக குறைவடைந்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here