ஒரு நாள் கூட சிறையில் இருப்பது பிடிக்கவில்லை: பசில் ராஜபக்ச

ஒரு நாள் கூட சிறையில் இருப்பது தமக்கு பிடிக்கவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கலா வாவியை நிர்மானித்த தாதுசே மன்னரை அவரது மகனான காசியப்ப மன்னன் அழைத்து சொத்துக்கள் எங்கே என கேட்ட போது, கைகளில் நீரை ஏந்தி இதுவே எனது சொத்து எனக் கூறியிருந்தார்.

என்னிடமும் அவ்வாறு கேட்கின்றார்கள். ஜனாதிபதிக்கும் (மஹிந்த) விரைவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான விடயங்கள் இந்த ராஜபக்சக்களுக்கு புதிய விடயமல்ல. என்னை கைது செய்த போது மஹிந்த ஜனாதிபதி என்னைப் பார்வையிட வந்தார்.

என்ன கஸ்டமா ஒரு மூன்று மாத காலம் உள்ளே இருக்கலாம் தானே எனக் கூறினார். ஆனால் எனக்கோ ஒரு நிமிடம் கூட சிறையில் இருக்க பிடிக்கவில்லை.

எவ்வாறெனினும் ராஜபக்சக்களை அச்சுறுத்தி விட முடியாது. எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகித்தாலும் அதனை முறியடிக்க முடியும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here