டெங்கின் கோர தாண்டவம் இளைஞன் உயிரை பரித்த சோகம்…

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த சோகம் மறைவதற்குள் தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நூர் முஹம்மது நுபைர் (வயது 27 ) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்துள்ளார்.

இதேவேளை, உயிர் இழந்த நபரின் சகோதரரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது

கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2088 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here