இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையில் குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தினால் மாணவர்களின் பாவனைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சீறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சரினால் இதுவரை எட்டு பாடசாலைகளுக்கு இவ்வாறான குடிநீர் வடிகட்டும் இயந்திரத் தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் கனடா கிளையின் நிதியுதவியுடன் இக் குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. 3 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தொகுதியிலிருந்து நாளொன்றுக்கு இரண்டாயிரம் லீற்றர் வடிகட்டிய குடிநீரை பெற்றுக்கொள்ளமுடியும்.

இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சி.வில்வராசா, ஏ.ஜே.எஸ். நிர்மாணிகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அகிலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here