புலிகளின் இலக்க தகடு மற்றும் துப்பாக்கி மீட்பு.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொத்தானை காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி ஒன்றும் புலிகளின் இலக்க தகடு ஒன்றும் இன்று செவ்வாயக்கிழமை (21) பகல் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுசரனையுடன் குறித்த காட்டுப்பகுதிக்கு சம்பவ தினமான இன்று பகல்  நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மகசீன் ஒன்றும் மற்றும் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here