விமலுக்கு பிணை வழங்குவதா இல்லையா? மேல் நீதிமன்றின் தீர்ப்பு இன்று

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்குவதா இல்லையா என  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராய்ச்சி தனது தீர்ப்பை இன்று அறிவிக்கவுள்ளார்

40 அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தி, நம்பிக்கை துரோகம் செய்து மோசடி புரிந்தமை, மோசடிக்கு உதவி ஒத்தாசை அளித்தமை ஆகிய குற்றச் சாட்டின் கீழ் விமல் வீரவன்சவுக்கு எதிராக  1982ஆம் ஆண்டின் 12 இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) அத்தியாயத்தின் பிரகாரமும் தண்டனை சட்டக் கோவையின் 386,388 ஆகிய அத்தியாயங்களின் கீழும்  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பிணை கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் தக்கல் செய்துள்ள மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here