கேப்பாப்பிலவு மக்களுக்கு இரு தினங்களில் தீர்வு: சுவாமிநாதன்

படையினர் வசமுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிரதேச காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்னும் இரு தினங்களில் தீர்மானம் எட்டப்படுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பது தொடர்பாக தானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுட்டிக்காட்டிய சுவாமிநாதன், குறித்த காணிகளை விடுவிப்பதற்கு இரு தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

எனினும், காணிகளை விடுவிப்பது தொடர்பில் ராணுவத்தினர் உறுதியான பதில் எதனையும் தெரிவிக்கவில்லையென்றும் காணிகளை விடுவிக்க ராணுவத்தினர் விரும்பவில்லை என்றும், குறித்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here