யாசகம் கேட்க சென்ற முதியவர் விபத்தில் மரணம், உடலை பொறுப்பேற்க யாருமில்லாத அவலம்

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாசகம் எடுக்கச்சென்ற, முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதோடு, அவரது உடலை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று – கல்முனை வீதியை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இருந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை குறித்த வயோதிபரின் உடலை யாரும் உரிமை கோரவில்லை என்பதால், முதியவரின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வயோதிபர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வயோதிபரை அடையாளம் தெரிந்தவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின், 067 22 77 213 என்ற இலக்கத்துக்கோ அல்லது 075 708 1317 (அப்துல் வஹாப் ) எனும் இலக்கத்துக்கோ அழைத்து தெரியப்படுத்தலாம் என வேண்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here