சமயங் கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்ட அங்கொடை லொக்கா

சமயங் என்ற பாதாள உலக குழு தலைவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ய அங்கொடை லொக்கா என்ற பாதாள உல குழு தலைவர் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான பத்தரமுல்லே பண்டி என்பவர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை சமயங் உட்பட கைதிகளை கொலை செய்ய சிறைச்சாலை அதிகாரிகளுக்குரிய சீருடைகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்தது யார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயங் என்பவரை உயிருடன் பிடித்துச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ய அங்கொடை லொக்கா திட்டமிட்டிருந்தாகவும், தாக்குதலில் சமயங் காயமடைந்திருந்ததால், அங்கொடை லொக்கா அவரை பேருந்துக்குள் இழுத்து வந்து கதவு அருகில் போட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டதாக பண்டி கூறியுள்ளார்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பண்டி என்ற குருப்புகே சத்துரங்க புஷ்பகுமாரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here