புதையல் எடுக்கச் சென்ற மூவர் பொலிஸாசாரால் கைது.

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்றயதினம் (22)கைதுசெய்துள்ளனர்.

ஹபரணைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி வீதியை மறித்து சோதனையிட்ட போது குறிப்பிட்ட வாகனத்தில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் பூமியில் உள்ள புதைப்பொருட்களைக் காட்டும் ஸ்கேன் இயந்திரம் உட்பட பூஜைப் பொருட்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் ஹங்வெல்ல, ஹெட்டிப்பொல, வெலிசர ஆகிய இடங்ளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச் சென்றவேளை அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here