20 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக நவீன தொடர்பாடல்

இலங்கையின் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக இலத்திரனியல் படக்காப்பகம் மற்றும் நவீன தொடர்பாடல் முறை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளுக்காக இலத்திரனியல் படக்காப்பகம், நவீன தொடர்பாடல் முறை என்பவற்றை தெரிவு செய்யப்பட்ட 20 அரச வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்திய சேவை வழங்குநர் பிரிவுகளில் வசதிகளை மேம்படுத்தவும் நடடிக்கை எடுக்கப்படவுள்ளது.

712 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 134 வைத்தியசாலைகளில் மற்றும் 26 பிரதேச வைத்திய வழங்குநர் பிரிவுகளில் மருந்துப் பொருட்கள் களஞ்சியசாலை வசதிகள் விருத்தி செய்யப்படவுள்ளது.

மேலும், 954 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் பிரதேச வைத்தியசாலை மட்டம் வரை வைத்திய வழங்குநர் முகாமைத்துவ தகவல் தொகுதியினை வியாபிக்கும் வேலைத்திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here