நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் பங்கேற்கும், பங்கேற்காதோர் பற்றிய விபர அறிக்கை

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கும் மற்றும் பங்கேற்காதோர் பற்றிய விபரங்களை நாடாளுமன்றில் அறிக்கையிடுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 22ம் திகதி அரசியல் அமைப்பு செயற்குழு கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்கேற்கவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் கூட்டமொன்றில் பங்கேற்க வேண்டியிருந்த காரணத்தினால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதற்கு முன்னதாக நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல் அமைப்பு செயற்குழுக் கூட்டத்தினை கூட்டு எதிர்க்கட்சி நிராகரித்துள்ளதாக சில கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த செய்திகள் முற்றிலும் பிழையானவை.

கூட்டங்களில் பங்கேற்போர் மற்றும் பங்கேற்காதவர்கள் பற்றிய விபரங்களை ஊடகங்களுக்கு வழங்கும் போது சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டுமென தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here