மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கவேண்டும்

தேசிய பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கல்குடா கல்வி வலயமானது ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்நோக்கும் வலயமாக உள்ளது. பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைவாகவே பணியாற்றுகின்றனர். வகுப்பு தரம் 11 உள்ள பாடசாலையில் ஆறு ஆசிரியர்கள் உள்ளனர்.

42 வருடம் பாடசாலை ஆரம்பித்தும், இன்றுவரை ஆங்கில ஆசிரியர் இல்லாத பாடசாலையும் உள்ளது. இந்த துர்ப்பாக்கிய சூழல் கல்குடா கல்வி வலயத்தில் நிலவுகின்றது. கவனஈர்ப்பு போராட்டத்தால் அதிகாரிகள் மனம் உடைந்து போயுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கேட்டால் விரைவாக தருகின்றோம் என்ற வாய் வார்த்தையால் மட்டும் கூறுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here